சமீபத்தில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  இதில் பெருவாரியான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.  சென்னை மாநகராட்சி 197வது வார்டு தி.மு.க வேட்பாளராக திருமதி வரலட்சுமி ராஜேந்திரன் என்பவர் அறிவிக்கபட்டார்.  அதே 197வது வார்டு சுயேச்சை வேட்பாளராக செய்யூர் தொகுதி வி.சி.க சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு அவரது மனைவியை சுயேட்சையாக நிறுத்தினார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக செய்யூர் தொகுதியில் வெற்றி பெற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தொல்.திருமாவளவனின் கண்டனமும் கோரிக்கையும் - உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர்


பாபு 197-வது வார்டில் திமுக கூட்டனியில் தனது மனைவி மகாலட்சுமிக்கு விசிக சார்பாக போட்டியிடுவதற்காக சீட் ஒதுக்க கேட்டுள்ளார். சோழிங்கநல்லூர் தொகுதியில் பள்ளிகாரணை பகுதியில் விசிகவிற்கு சீட் ஏற்கனவே ஒதுக்கப்பட்டதால் 197-வது வார்டில் திமுகவை சேர்ந்தவர்க்கு சீட் ஒதுக்கப்பட்டது. 
தனது மனைவிக்கு சீட் ஒதுக்காததால் பாபு சுயேட்சையாக போட்டியிட வைத்தார். இவர் அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பொங்கல் பரிசு என கூறி புடவைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.  ஆனாலும் தேர்தலில் இவர் தோல்வி அடைந்தார்.  அப்பகுதியில் போட்டியிட்ட அதிமுக-வை சேர்ந்த மேனகா ஷங்கர் என்பவர் வெற்றி பெற்றார். 


நேற்று மேயர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.  அதில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கிய பதவிகளில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த திருமாவளவன், கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்' காத்திட வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து ஸ்டாலினும் நேற்று இரவு, வெற்றி பெற்ற அனைவரும் பதவி விலக வேண்டும் என்று கேட்டு கொண்டார்.  



மேலும் படிக்க | விரிசல் விடுகிறதா திமுக கூட்டணி? என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்!!


தற்பொழுது சென்னை திமுக உடன் பிறப்புகள் திருமாவளவனுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.  197வது வார்டில் பனையூர் பாபு அவரது மனைவியை திமுக-விற்கு எதிராக நிறுத்தினார்.  அப்பொழுது இதனை அறிந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எந்தவித கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் காத்தார். அந்த சமயம் கழகத்தின் கூட்டணி தர்மம் அவர் கண்ணுக்கு தெரியவில்லையா? இப்பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட கூட்டணி கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து திமுக நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதற்கு தயாராக உள்ளனர். 


ஆனால் இன்று கண்டனம் தெரிவித்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தனது கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினரான பனையூர் பாபுவை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று அறிக்கைவிடுக்க  தயாரா? செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பாபு ராஜினாமா செய்ய தயார் என்றால் ஸ்டாலின் அறிவித்தபடி தி.மு.க உறுப்பினர்கள் தங்களது பொறுப்பை ராஜினாமா செய்வதற்கு தயாராக உள்ளனர்.  வரலட்சுமி ராஜேந்திரன் தோற்றதற்கு முக்கிய காரணமாக இருந்த செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபுவை தனது பதவியை ராஜினாமா  செய்ய விடுதலை  சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை விட வேண்டும் என்று கூறியுள்ளனர்.  


மேலும் படிக்க | ’பொறுப்பை விட்டு விலகுக’ திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR