’பொறுப்பை விட்டு விலகுக’ திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பதவி ஏற்றிருக்கும் திமுகவினர் பொறுப்பை விட்டு விலகுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 4, 2022, 06:41 PM IST
  • திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை
  • கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பதவியை விட்டு விலகுக
  • பதவியை விட்டு விலகாவிட்டால் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்
’பொறுப்பை விட்டு விலகுக’ திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை title=

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திமுக கூட்டணிக்குள் இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. திமுக தலைமை கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். இது குறித்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியினருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க | விரிசல் விடுகிறதா திமுக கூட்டணி? என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்!!

அதில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதும், கூட்டணி பங்கீடு சுமூகமாக முடிந்ததும் மகிழ்ச்சியளித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், அந்த மகிழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில் மறைமுகத் தேர்தலில் நடைபெற்றுள்ள நிகழ்வுகள் தன்னை வருத்தமடைய செய்திருப்பதாக கூறியுள்ள ஸ்டாலின், வெற்றியை நினைத்தே கவலை கொண்டிருப்பதாக கூறியுள்ளார். 

திமுகவின் கொள்கையான கடமை, கண்ணியம், கட்டுபாடு என்பதில் இன்று சிலர் அந்த கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்டு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பொறுப்புகளில் அமர்ந்திருப்பதாக கூறியுள்ள அவர், இந்த நிகழ்வுகளால் திமுக தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சி தனக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தன்னுடைய வருத்தத்தையும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பொறுப்பேற்றிருக்கும் திமுகவினர், அந்த பொறுப்புகளில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு விலகாவிட்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். மேலும், பொறுப்பை விட்டு விலகியவர்கள் தன்னை வந்து சந்திக்குமாறும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் படிக்க | திமுக தலைவர் ஸ்டாலின் காட்டிய அதிரடி - அடங்கி போன சேலம் நிர்வாகிகளின் ஆட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News