`எந்த விவசாயி சொன்னான் நீ சொல்லுயா` - செய்தியாளரிடம் ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்
உரத்தட்டுப்பாடு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, கடலூர் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், விவசாயிகள் வெளிமாவட்டங்களில் இருந்து உரம் வாங்கி வருவதாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதனால் கோபமடைந்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளரிடம் நீ வாங்கினாயா என்று கேட்டார். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இந்த புகார் தெரிவிக்கப்பட்டது என்று நிருபர் கூறியதற்கு, 'எந்த விவசாயி சொன்னான்; நீ சொல்லுயா' என்று ஒருமையில் கூறி விட்டு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள உரக்கடைகளில் யூரியா உரம் தட்டுப்பாடு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். சில உரக்கடைகளில் யூரியா உரம் இருந்தும், அதை சிறு விவசாயிகளுக்கு கொடுக்க மறுப்பதாக குற்ற சாட்டு எழுந்தது.
மேலும் படிக்க | உதயநிதி கடவுள் என்பதால் காலில் விழுந்தேன் - தஞ்சை மேயர் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ; உரத்தட்டுப்பாடு போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அமைச்சரின் இந்த பதில் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | அடித்தட்டு மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதா?... சீமான் விளாசல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR