கோவையில் கொடிசியா அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும் துமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா செய்தியாளர்களை சந்தி்த்தார். அப்போது பேசிய அவர்,  “கோவை மாவட்டம் , அன்னூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் டிட்கோ தொழிற்பூங்கா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டபோது விவசாயிகள் போராட்டத்தை அறிவித்து மக்களிடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறினர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிற் துறை அமைச்சர் இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசியுள்ளோம். டிட்கோ பகுதியில் வர உள்ள நிறுவனங்கள் மாசு உருவாக்கும் நிறுவனங்கள் அல்ல.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் விளை நிலங்களாக இல்லை. அதனால் கையகப்படுத்த எந்த தடையும் இல்லை. அச்சத்தின் காரணமாக மக்கள் போரட்ட நிலைப்பாடு எடுத்துள்ளனர். இன்றோ அல்லது நாளையோ இதுதொடர்பாக விரிவான அரசு அறிவிப்பு வெளியாகும். கம்பெனி நிலங்கள் மட்டுமல்ல; மக்களின் நிலங்களும் எடுக்கப்படும் என வதந்திகள் பரப்புகின்றனர். ஆனால் கம்பெணி நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட உள்ளது. 


மக்கள் தாங்களே கொடுத்தால் மட்டும் அந்த நிலம் எடுத்துக்கொள்ளப்படும். விளை நிலங்கள் ஒருபோதும் எடுக்கப்படாது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பரப்படும் தகவல்கள் தவறானவை. நிலத்தடி நீரை கெடுக்கும் தொழிற்சாலைகள் அங்கு வராது. அனுமதி இல்லாமல் தனிநபர் சாகுபடி நிலத்தை எடுக்கமாட்டோம். காற்று, நிலம் மாசுபடுத்தும் தொழிற்சாலை அங்கு வராது.


மேலும் படிக்க | விமர்சனங்களையும், அழுத்தத்தையும் அன்றே உணர்ந்தேன்; எனது செயலால் எதிர்கொள்வேன்- உதயநிதி ஸ்டாலின்


50 கோடி ரூபாய்க்கு மேல் எந்த நிறுவனங்கள் என்றாலும் மத்திய அரசு அனுமதியளித்துதான் வர வேண்டும். அண்ணாமலை அரசியல் எனக்கு புரியவில்லை. நாங்குநேரியை தொழில் முனைவோர் விரும்பவில்லை; அதற்கு என்ன செய்ய முடியும்?மக்களின் எதிர்ப்புகள் நியாயமாக இருக்கும்பட்சத்தில் மக்கள் பக்கம்தான் இருப்போம்.


திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்ற அண்ணாமலை அறிவிப்பை வரவேற்கிறேன்; ஆனால் அதை அவர் நிரூபிக்க வேண்டும். மக்களின் தேவை என்ன என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கேட்டு தீர்த்து வைப்பேன். பாதிப்பு என்றால் மக்கள் பக்கம் நிற்பேன்" என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ