சென்னை தேனாம்பேட்டையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70வது ஆண்டு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு மற்றும் திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான  கனிமொழி கொடியேற்றி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, அரசியல் அமைப்பு சட்டம் எதிர்கொள்ளும் சவால்களின் முக்கியத்துவம் குறித்த தலைப்பில் பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அவர், "இன்று இருக்கக்கூடிய ஒன்றிய அரசால் பாஜகவின் தாக்குதலால் இருக்க கூடியது மக்கள் மட்டும் இல்லை, அரசியலமைப்பு சட்டமும் தான். ஜனநாயகத்தின் மீது அரசியல் அமைப்பு பிரதிநிதிகளின் மீது என்ன மரியாதை இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று மணிப் பூர் எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி பேசக்கூடிய இடத்தில் இருக்கிற ஒருவர் தன்னுடைய பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிறார். அதை சரி செய்வதற்கு எந்த முயற்சியும் இல்லாமல், இன்றைக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். 


மேலும் படிக்க | உளுந்தூர்பேட்டை: தண்ணீர் குடிக்க குடத்திற்குள் தலைவிட்டு மாட்டிகொண்ட நாய்


இதற்கு என்ன காரணம் என்றால் மத அடிப்படையில் இருக்கக்கூடிய காழ்ப்புணர்ச்சி தான். பிஜேபி ஆட்சி செய்து கொண்டிருக்கிற எல்லா மாநிலத்திலும் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதை நாடு முழுவதும் கொண்டு வருவதுதான் அவர்களுடைய எண்ணம். இன்றைய அரசியலமைப்பு சட்டம்,  வாழ்க்கை, நம்முடைய பிள்ளைகளுடைய எதிர்காலம், நாம் யார் என்பதை பாத்துக்கொள்ள கூடிய அரண். இதை மாற்ற வேண்டும் என்பவர்களின் ஆட்சி தொடரும் என்றால் நாட்டிற்கும் நமது எதிர்காலத்திற்கும் எந்தெந்த பாதுகாப்பும் இருக்காது.
 
இதையெல்லாம் முறியடிக்க கூடிய  வகையில் தான் நேற்று பாட்னாவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரு அணியில் திரண்டு ஆட்சியை மாற்ற வேண்டும் என முடிவெடித்திருக்கிறார்கள். நிச்சயமாக வரக்கூடிய தேர்தலில் வேண்டும் என்பது யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது  என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய துறைகளை வைத்து தமிழகத்தையும் , திராவிட முன்னேற்றக் கழகம் அச்சுறுத்தி விடலாம் என எண்ணுகிறது, திமுக இதற்கெல்லாம் பயப்படக்கூடிய இயக்கம் இல்லை" என அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ