விவசாயத்தையும் விவசாயியையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது என மோடியை கடுமையாக தாக்கிய திமுக எம்.பி. கனிமொழி! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


விவசாயிகள் சங்கத்தினைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் இன்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போவதாக அறிவித்திருந்தன. போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் நேற்று டெல்லி வந்தனர். ரெயில்களிலும், பஸ்களிலும், பிற வாகனங்களிலும் வந்த அவர்கள் போராட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்துக்கு பேரணியாக சென்றனர். ஒருங்கிணைப்பு குழுவின் முக்கிய நிர்வாகிகளின் ஒருவரான ‘சுவராஜ் அபியான்’ தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர். 


விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆம்ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து, தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரெயில் மூலம் டெல்லி சென்று, அங்கிருந்து ராம்லீலா மைதானம் சென்றனர்.  இந்தியா முழுவதிலும் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டனர். 


இதை தொடர்ந்து, சுமார் 3,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை இட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் " தமிழக விவசாயிகள் டெல்லி வீதியில் நிர்வாண போராட்டம் நடத்திய போதே பிரதமர் ஓடி வந்து ஆறுதல் என்னும் ஒற்றைத்துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவு இன்று இந்திய அளவில் 5 லட்சம் விவசாயிகள் நிர்வாண ஊர்வலத்தில் வந்து நிற்கின்றது. 



விவசாயத்தையும் விவசாயியையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது" என மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.