முரசொலி நாளேடு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது
திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஹேக்கர் குழு லிஜியன் திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி. இதன் இணையதளம் இன்று காலை முடக்கப்பட்டது. அதில், மின்னணு வாக்குப்பதிவு
எந்திரங்களை தடை செய்ய வேண்டும் எனவும், ஜனநாயகத்தை காத்திட வேண்டும் எனவும் லிஜியன் குறிப்பிட்டுள்ளது.
முக்கியமாக, உத்தரப்பிரதேசத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் லிஜியன் அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும், மின்னணு வாக்கு இயந்திரம் குறித்த வீடியோ ஒன்றையும், அதில் லிஜியன் இணைத்துள்ளது.
மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்றும் லிஜியன் கூறியுள்ளது.
இந்நிலையில், முடக்கப்பட்ட திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.