வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற திமுக புது திட்டம்...
அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், எதிர்வரும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இன்று ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது.
அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், எதிர்வரும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இன்று ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவிக்கையல்...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது. 40 தொகுதிகளிலும் உள்ள ‘பூத்’ கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 3-ஆம் தேதி முதல் இந்த கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்.
இந்த கிராம சபை கூட்டங்கள் மூலம் நாங்கள் மக்களுடன் உரையாடவுள்ளோம். தி.மு.க. மட்டுமின்றி தி.மு.க. கூட்டணி கட்சிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர். என தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றார். மக்களோடு மக்களாக அமர்ந்து உரையாற்றினார். அப்பகுதி மக்களின் பிரச்சனைகளை கேட்டு அறித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ஸ்டாலின் அதே யுக்தியை கையாள முன்வந்துள்ளார்.