திமுக தலைவர் முக ஸ்டாலின் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக தலைவராக ஸ்டாலின் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு தொண்டர்களை ஊக்குவித்தும், கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறார்.


இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் உடல் நிலை குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சிறுநீரக தொற்று காரணமாகவே ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.