ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்க்கு எதிராக DMK சார்பில் 28-ல் போராட்டம்!
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்த உடன் விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்!!
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்த உடன் விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்!!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக சார்பில் வருகிற 28 ஆம் தேதி திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் போராட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து காவிரி டெல்டா விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதாக குறிப்பிட்டார்.
பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின் கூறுகையில்; பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை தேசிய சின்னம் என்றால் காகத்தை தேசிய பறவையாக அறிவிக்கலாமே என தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை சரியாக திறக்கப்படாததாலும், நீர்நிலைகள் சரியாக தூர்வாரப்படாததாலும் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற எந்த முயற்சியையும் இந்த அரசு எடுக்கவில்லை.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்கள் கருத்தை கேட்க அவசியமில்லை என்றும், திட்டத்தை செயல்படுத்த சூற்றுச்சூழல் துறையில் அனுமதி பெற தேவையில்லை என்றும் மத்திய அரசு கூறுகிறது. காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் முழுமுயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்த உடன் விவசாயத்தை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நாகை மாவட்டத்தில் தி.மு.க. பெற்ற மிகப்பெரிய வெற்றி, நான் எதிர்பார்க்காத வெற்றியாகும். இந்த வெற்றிக்காக பாடுபட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினருக்கும், கூட்டணியை சேர்ந்த கட்சியினருக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெறும் வெற்றிக்கு முன்னோட்டம் ஆகும்.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக சார்பில் வருகிற 28 ஆம் தேதி திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் போராட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.