திமுகவின் மூத்த உறுப்பினர் 103 வயது மூதாட்டி ரங்கம்மாள் ஸ்டாலினை சந்தித்தார்
திமுகவின் 70 ஆண்டுகள்கால உறுப்பினர், 103 வயது மூதாட்டி ரங்கம்மாள் அவர்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வருடத்துடன் திமு கழகம் ஆரம்பித்து 70 ஆண்டுகள் ஆகிறது. இந்த 70 ஆண்டுகளில் தமிழகத்திற்காக பல சீர்திருத்தங்களை செய்துள்ளது. திமுகவை மிகப்பெரிய இயக்கமாக மாற்றியதில் அண்ணாவும், கருணாநிதியும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
திமுகவின் 70 ஆண்டுகால பயணத்தை சமூக வலைதளங்களில் திமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல், பிற கட்சியினரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, அண்ணா அறிவாலயத்தில் 103 வயது மூதாட்டி ரங்கம்மாள் அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுக்குறித்து திமுக ட்விட்டர் பக்கத்தில் கூறியது,
கழக தலைவர் @mkstalin அவர்களை இன்று சந்தித்த, கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும், 70 ஆண்டுகாலமாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருபவருமான, மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 103 வயது மூதாட்டி ரங்கம்மாள் அவர்கள், கழக தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.