தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம் பாளைத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு கடந்த திமுக அரசின் ஓராண்டு சாதனை குறித்து விளக்கமாக பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார். பின்னர், சுமார் ஒரு மணிநேரம் பேச்சுக்கு பிறகு கூட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பி சென்றார். ஸ்டாலின் வருகையை ஒட்டி அயோத்தியாபட்டணத்திலிருந்து விழா நடைபெறும் இடம் வரை இருபுறமும் பிரம்மாண்ட வரவேற்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தது. மேலும் பொதுக்கூட்ட நுழைவாயிலில் இருந்து மேடை வரை ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் குலைகளோடு கட்டப்பட்டு வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


கூட்டத்தில் பங்கேற்று விட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கிளம்பிய உடன் கூட்டத்தைக் கலந்து கொள்ள வந்த பொது மக்கள் திமுக தொண்டர்கள் வாழைப்பழத்தை பதம் பார்த்தனர். ஆயிரக்கணக்கான வாழை மரங்களில் இருந்த வாழைத்தார்களை கைகளுக்கு எட்டியபடி பிய்த்துக் கொண்டும் அறுத்து கொண்டும் தோள்மேல் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக சென்றனர். போட்டிப்போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் வாழைத்தார்களை பிய்த்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் படிக்க | பழ.நெடுமாறனை நேரில் சந்தித்த பேரறிவாளன் - என்ன பேசினார் ?



ஆண்களும் பெண்களும் ஒருவருக்கு இரண்டு தார்கள் என எடுத்து வந்து தாங்கள் வந்த வாகனத்தில் எடுத்துச் சென்றனர். அப்போது தொண்டர் ஒருவர் ஸ்டாலின்தான் வந்தாரு பாடலைப் பாடியபடி எடுத்துச் சென்றது திரும்பி பார்க்க வைத்தது.  கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் காத்திருந்த கட்சி தொண்டர்களுக்கு இந்த  வாழைத்தார் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சுவாரஸ்ய நிகழ்ச்சியை அங்கிருந்த கட்சி நிர்வாகிகளும் காவல்துறையினரும் கண்டு ரசித்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு கரூரில் திமுக கூட்டத்தில் உதயநிதி பேசிக்கொண்டிருந்த போது இதே மாதிரியான சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. 



மேலும் படிக்க | கடல் வழியாக துறைமுகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் - பழவேற்காட்டில் பதற்றம்.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G