’மதவெறிப் பித்துப் பிடித்த’ அண்ணாமலை: திமுகவின் கடும் சாடல் பின்னணி என்ன?
TKS Elangovan: மலிவான பிரசாரத்தில் ஈடுபடும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை தன் அநாகரிக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக பொருளாளர் டிஆர் பாலுவின் வீடியோவை கட் அண்ட் பேஸ்ட் செய்து மலிவான பிரச்சாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈடுபடுவதாகவும், இத்தகைய அநாகரீக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில், "பொதுவாக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும்போது இருக்கும் சிக்கல்கள் பற்றி திமுக பொருளாளர் டிஆர் பாலு பேசியிருக்கிறார். அவர் பேசிய கருத்துக்களை வெட்டியும், ஒட்டியும் உண்மைக்கு மாறாக திரித்தும் அண்ணாமலை பரப்பி வருகிறார். இது அரசியல் அநாகரிகத்தின் உச்சம். அசிங்கமான அரசியல் நடத்துகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை" என கடும் கண்டனத்தை டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Bypolls: அதிமுகவும் தேமுதிகவும் கூட்டு? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு! திமுக நிலை?
மதுரையில் தி.க சார்பில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது. இதில் திமுகவின் பொருளாளர் டிஆர் பாலு கலந்து கொண்டு பேசினார். அப்போது, சாலை விரிவாக்க பணிகளின்போது ஏற்படும் இடர்பாடுகளை பற்றி பேசிய அவர், தனது தொகுதியில் சாலை விரிவாக்கத்தின்போது 3 கோயில்களை இடித்ததாகவும், அந்த கோயில்களுக்கு பதிலாக 3 பெரிய கோயில்களை மீண்டும் கட்டிக் கொடுத்தாக தெரிவித்திருந்தார். மேலும், தவிர்க்க முடியாத காரணங்ளால் அந்த கோயில் இடிக்கப்பட்டதையும் டிஆர் பாலு சுட்டிக்காடியிருந்தார்.
ஆனால், இந்த காணொளி வேண்டுமென்றே எடிட் செய்து பரப்பப்பட்டு வருவதாக இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அந்த அறிக்கையில், " ஐபிஎஸ் அதிகாரியாக இருந்துவிட்டு அரைவேக்காட்டு அரசியல் நடத்த வந்த அண்ணாமலை, டிஆர் பாலு பேசிய முன்பகுதி வீடியோவை மட்டும் வெளியிட்டுள்ளார். இனி அவரை “கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை” என்றே அழைக்க வேண்டும் போலிருக்கிறது. மதவெறி துவேஷத்தைக் கிளப்ப வெட்டி ஒட்டி விஷத்தைக் கக்கியிருக்கும் அண்ணாமலை தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு உருவாகியிருக்கும் ஒரு கேடு என்பதை இதுபோன்ற தனது அறமற்ற செயல்களால் தினமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்" என்றும் விமர்சித்துள்ளார்.
" 2008 -ஆம் ஆண்டு குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகரில் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக 80 கோயில்களை இடித்துத் தள்ளினார்களே, அந்த நடவடிக்கைக்காக இன்றைய பிரதமரும், அன்றைய குஜராத் முதலமைச்சருமான திரு. மோடி அவர்களை இந்துக்களுக்கு விரோதி எனக் கூறினால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா?. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகக் கோயில்களை இடிக்கும் பணியை குஜராத்தின் அன்றைய மோடி தலைமையிலான அரசு, ஒரு தீபாவளி தினத்தின் இரவில் தொடங்கியதை அண்ணாமலை அறிவாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், அண்ணாமலை இது போன்ற மலிவான செயல்களை நிறுத்திக் கொள்வது நல்லது என்றும் திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | ஆ.ராசாவின் நீலகிரி தொகுதியை குறி வைக்கும் பாஜக..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ