ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன்
இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை துரைமுருகன் சந்தித்துள்ளார்.
ஆந்திரா: நேற்று ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில், அவரை தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இருவருக்கான சந்திப்பு முடிவடைந்த பிறகு சந்திரசேகர ராவ் மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரில் ஒருவர் கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
ஆனால் திமுக தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மரியாதை நிமித்தமாக தான் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக கூறப்பட்டது.
தேர்தல் முடிவுக்கு கிட்டத்தட்ட 10 நாட்கள் உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியது.
இந்தநிலையில், இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை துரைமுருகன் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மற்றும் அவரது மனைவியும் உடன் இருந்தனர்.