இரட்டை படுகொலை சம்பவம் கடும் கண்டனத்தை பதிவு செய்த திமுக - வி.சி.கே - காங்கிரஸ்!
ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் புதன்கிழமை இரண்டு தலித் இளைஞர்களை படுகொலை செய்யப்பட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி (VCK) மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் புதன்கிழமை இரண்டு தலித் இளைஞர்களை படுகொலை செய்யப்பட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி (VCK) மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வி.சி.கே.வின் நிறுவனர் தொல். திருமாவளவன், சாதி வெறியர்களால் "திமுக தலைமையிலான கூட்டணிக்கு காத்திருக்கும் பாரிய வெற்றியை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், "மத மற்றும் சாதி வெறியர்கள் தமிழ்நாட்டை அழிக்க சதி செய்தார்கள்" என்றும் கூறினார். பாதிக்கப்பட்ட இருவர் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் (வயது 26), செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சூரியா (26) ஆகியோர் கத்தி மற்றும் பாட்டில்களால் குத்திக் கொல்லப்பட்டனர். அவர்களது நண்பர்கள் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை வழக்கில் இதுவரை வன்னியர் சமூகத்தைச் (Vanniyar Community) சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய அமமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு
அதிமுக தலைமையிலான கூட்டணி தான் கொலைக்கு காரணம்: வி.சி.கே குற்றச்சாட்டு
இந்த இரட்டைக் கொலையின் பின்னணியில், நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற அச்சம் காரணமாக அதிமுக - பாஜக - பாமக கூட்டணி கட்சிகள் வன்முறையை கட்டாயப்படுத்தியதால், வாக்குப்பதிவு முடிந்ததும் தலித் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan) கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் லாபங்களுக்காக சாதி வெறியர்களை ஊக்குவிப்பதாக தொல். திருமாவளவன் எம்.பி. குற்றம் சாட்டினார். மேலும் மாநிலம் முழுவதும் தலித்துகள் மீதான தாக்குதல்களை குறித்து முதல்வர் (Edappadi Palaniswami) கண்டுக்கொள்வது இல்லை, வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டினார். சாதி வெறியர்கள் மற்றும் மணல் மாஃபியாக்களை கைது செய்யக் கோரியும், அவர்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை பராமரிக்குமாறு காவல்துறையினரை வலியுறுத்திய திமுக:
திமுக (DMK) தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) அரக்கோணம் இரட்டைக் கொலைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இறந்தவரின் உறவினர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார். சாதிய வன்மத்தோடு இரண்டு தலித் இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டதாக திமுக தலைவர் கூறினார். மேலும் "புதிய அரசாங்கம் ஆட்சி அமைக்கும் வரை" மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடுமையாக உழைக்குமாறு காவல்துறையினரை வலியுறுத்தினார். மேலும், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துச் செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும். சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலித் இளைஞர்கள் மீதான தாக்குதலை திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசும் (Congress) கண்டித்துள்ளது.
ALSO READ | போடி தொகுதியில் துணை முதல்வரின் மகன் ஓ.பி .ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR