Local Body Election: உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி - காட்சிகள் மாற வாய்ப்பு!
திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகள் கட்சிகளின் ஒன்றாக சட்டசபைத் தேர்தலை சந்தித்ததை போல, உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுமா? அல்லது தனித்தனியா போட்டியிடுமா? கூட்டணிகள் மாறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
DMK Alliance vs AIADMK Alliance: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 6 அக்டோபர் மற்றும் 9 அக்டோபர் என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் (Local Body Election) நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். மேலும் இந்த ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன எனவும் கூறினார்.
முன்னதாக 10 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வாக்குப்பதிவு (Polling Time) நடைபெறும் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்றும், மேலும் கொரோனாவால் பாதித்தவர்கள் மாலை 5 முதல் 6 வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல்: 15 முதல் 22 ஆம் தேதி வரை
வேட்புமனு பரிசீலனை: 23 ஆம் தேதி
வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி நாள்: 25 ஆம் தேதி
வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 12 ஆம் தேதி.
ALSO READ | : திமுக அரசின் பொய்யான வாக்குறுதி குறித்து அதிமுக காட்டம்
தற்போது இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிகப்பட்டு உள்ளதால், திமுக (DMK), அதிமுக (AIADMK Alliance) தலைமையிலான கூட்டணிகள் கட்சிகளின் ஒன்றாக சட்டசபைத் தேர்தலை சந்தித்ததை போல, உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுமா? அல்லது தனித்தனியா போட்டியிடுமா? கூட்டணிகள் மாறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் ஏழு மாவட்டம் வட மாவட்டத்தை சேர்ந்தவை ஆகும். இங்கு வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதேநேரத்தில் பட்டிலின மக்களும் உள்ளனர். வன்னியர்கள் ஓட்டு எங்களுக்கு தான் என அரசியல் செய்யும் பாமக ஒருவேளை திமுக கூட்டணியில் சேரலாம் எனத் தெரிகிறது. அதற்கு காரணமும் இருக்கிறது. என்னவென்றால், 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என போராடியவர்களின் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வன்னியர்கள் ஓட்டை முழுவதும் அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வன்னியர்கள் ஓட்டு சிதறிவிட்டால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதேநேரத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என பாமக (PMK) ஆலோசனை செய்து வருகிறது. சமீபகாலமாக திமுகவின் செயல்பாடுகளையும் பாமக தலைவர் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) இடம்பெற்றுள்ளது. ஒருவேளை திமுக-வை நோக்கி பாமக வந்தால், தொல். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புகள் மிக அதிகம். இது திமுகவுக்கு பெரும் இழப்பாகும். ஏனென்றால், தலித் ஓட்டுகள் திமுக இழக்க நேரிடலாம்.
ALSO READ | 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
அதேபோல தேமுதிகவும் (DMDK) திமுக உடன் கூட்டணி அங்கம் வகிக்கலாம் எனத்தெரிகிறது. கடந்த சில மாதங்களாக தேமுதிக உடன் திமுக தரப்பில் நெருங்கி வருவதை பார்க்கலாம். முதலில் முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின், அதன்பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவின் முக்கியப்புள்ளிகள் என விஜயகாந்த் வீட்டுக்கே போய் அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்கள். அப்பொழுது இருந்தே திமுக மற்றும் தேமுதிக கை கோர்க்கலாம் என தமிழ்நாடு அரசியலை கூர்ந்து கவனித்து வரும் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
அதேபோல திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை செய்து வருகிறது. சட்டசபைத் தேர்தலில் மிகக்குறைவான இடங்கள் தான் ஒதுக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் தேசிய கட்சியான எங்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கயுள்ளது.
மறுபுறம் அதிமுக கூட்டணியில் அதிகமாக சலசலப்பும் இருக்காது எனத் தெரிகிறது. ஆனால் இங்கு பாமகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடக்காதப் பட்டசத்தில், பாமக - திமுக-வை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது அல்லது தனித்துக்கூட போட்டியிடலாம். உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் ஓரிரு மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR