திமுக கூட்டணி குறித்து விரைவில் பேச்சுவார்த்தை -திருமாவளவன்!
திமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்!
திமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்!
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இவ்வாறு தெரவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்., வரும் பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புவதாகவும், அது தனது சொந்த தொகுதி எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் அந்த தொகுதியில் திருமா போட்டியிடுவது வழக்கமாகும்.
இதற்கிடையில் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு., பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க.தான் முதலில் கூட்டணியை அமைத்தது. இந்த கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்று இருந்தாலும் புதிய கட்சிகள் வந்தால் வரவேற்பதாக தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள் முடிவுசெய்துள்ளனர்.
மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் ஒருமித்த கருத்துள்ள யாவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் தங்களது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தமிழ பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு., தமிழக பட்ஜெட்டில் ஒன்றுமே கிடையாது. எவ்வித புதிய அறிவிப்புகளும் இல்லை. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி கிடைக்கவில்லை என்பதை பட்ஜெட்டில் விமர்சித்து உள்ளனர். பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணிக்கும் முன்னணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணி அமைப்பது நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
ரபேல் போர் விமான ஊழல் குறித்து பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு பிரதமர் மீது ஆதாரம் இல்லாமல் யாரும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். தேர்தல் தேதி அறிவித்தவுடன் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்தார்.