நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த டிச., 21 ஆம் நாள் நடைப்பெற்ற இந்த இடைத்தேர்தலில் 1,76,885 வாக்குகள் பதிவாகின. இன்று (டிச., 24) காலை 8.00 மணியளவில் துவங்கியது. ஆரம்பம் முதலே சுயேட்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் தற்போது 40707 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றிப் பெற்றுள்ளார்.


இத்தேர்தல் முடிவுகளில் பிரதான கட்சிகளான திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்கள் டெப்பாசிட்டை இழக்கின்றன. 


இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்நிலையை திமுக மீண்டு வரும் என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...


"ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் அண்ணா தி.மு.க. தரப்பில் இருந்தும், வெற்றி பெற்ற வேட்பாளர் தரப்பில் இருந்தும் பாய்ந்த பணவெள்ளத்தில் ஜனநாயகம் மூழ்கி விட்டது.


எத்தனையோ அறைகூவல்களையும் சோதனைகளையும் கடந்து வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம், இந்த நிலைமையையும் எளிதில் எதிர்கொள்ளும்."


என தெரிவித்துள்ளார்!