ஊரை ஏமாற்ற முதல்வர் பழனிசாமி பழத்துக்காக பணம் தந்ததாக  கூறியுள்ளார் என ஸ்டாலின் தாக்கு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை தமிழகம் மற்றும் போதுவையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தில் பண பட்டுவடவை தவிர்க்க பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில், சென்னைகோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "திமுகவினரை மிரட்டவே வருமானவரித்துறை சோதனை நடந்துள்ளது. ஆளும் கட்சியின் உத்தரவின் பேரில் வருமானவரித்துறையினர் செயல்படுகின்றனர். இதற்கெல்லாம் திமுக ஒருபோதும் பயன்படாது. உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் பினாமி சபேசன் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை பற்றி இதுவரை எந்த தகவலும் வரவில்லை. 


முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பெண்ணிற்கு திருட்டுத்தனமாக கையில் பணத்தை திணிக்கிறார்; வாழைப்பழத்துக்கு பணம் கொடுத்தார் என்றால் வெளிப்படையாக கொடுத்திருக்கலாமே? பழத்துக்கான பணத்தை ஏன் ரகசியமாக  கொடுக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் தேர்தல் ரத்து ஆவணத்தில் குடியரசுத்தலைவர் கையெழுத்திட்டதற்கு எந்த பரிகாரமும் கிடையாது" என்று கூறினார். 


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு பெண்ணுக்கு பணம் கொடுத்த வீடியோ வைரலாக பரவியது. அந்த பெண்மணி கொடுத்த வாழைப்பழத்துக்கு தான், தான் பணம் கொடுத்ததாக முதல்வர் பின்னர் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.