#2GScamVerdict: 2G வழக்கு தீர்ப்பு வெளியானது! குஷியில் திமுக ஆதரவாளர்கள்!
தீர்ப்பு வழங்கப்பட இருப்பதினால், தனிக்கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென ஆ.ராசா உள்ளிட்டோருக்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நேரடி தகவல்கள் உடனுக்குடன் கீழே...
11:35 21-12-2017
2G வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பை அடுத்து கோயம்புத்தூரில் திமுக ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
11:32 21-12-2017
இது ஒரு தவறான வழக்கு. கடந்த 2 சட்டமன்ற தேர்தலுக்கு, இந்த வழக்கு எங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது, இப்போது அது தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது: ஆர்.எஸ் பாரதி, DMK.
11:29 21-12-2017
தீர்ப்பளித்தபின்னர் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டிற்கு வெளியே கனிமொழியை சந்திக்க ஆதரவாளர்கள் அலைமோதும் கூட்டம்.
1:26 21-12-2017
நாங்கள் தீர்ப்பு நகல் வருவதற்க்காக காத்திருக்கிறோம். அதற்குப் பிறகு நாங்கள் சட்டப்பூர்வ அறிவிப்பினை தெரிவிப்போம்:: சிபிஐ
11:15 21-12-2017
அரசாங்கத்தின் மிக உயர்ந்த அளவிலான மோசடி குற்றச்சாட்டில் உண்மை இல்லை: பி சிதம்பரம், காங்கிரஸ்.
11:10 21-12-2017
அனைவருக்கும் நன்றி தெரவித்துகொள்கிறேன்: கனிமொழி, ராஜ்யசபா எம்.பி.
11:06 21-12-2017
வெற்றி இப்போது தொடங்குகிறது. அரசியல் நோக்கங்களுடன் இந்த வழக்கு எங்கள் மீது பதிவுசெய்யப்பட்டது. எங்கள் எதிராக சதிகாரர்கள் செயல்பட்டனர், ஆனால் இப்போது எல்லாம் வீசியெறியப்பட்டது: திமுக மூத்த தலைவர் துரைமுருகன்.
11:02 21-12-2017
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டதார் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்: விஜய் அகர்வால், ஸ்வான் டெலிகாம் ப்ரோமோட்டர் லாயர் ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா மற்றும் மற்றவர்கள்.
11:00 21-12-2017
2G ஸ்பெக்ட்ரம்: டெல்லி கோர்ட் வளாகத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
10:57 21-12-2017
2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2G வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லோரும் விடுதலை என தகவல்.
10:49 21-12-2017
ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அணைவரும் விடுதலை!
10:10 21-12-2017
பாட்டியாலா நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு
10:24 21-12-2017
தமிழகத்திலிருந்து சென்ற திமுக தொண்டர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றம்.
10:12 21-12-2017
இன்னும் சிறிது நேரத்தில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
10:05 21-12-2017
கனிமொழியுடன் அழகிரியும் கோர்ட்டுக்கு வருகை
10:02 21-12-2017
ஜி வழக்கில் காலை 10.30 மணிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பு வழங்குகிறார்
10:02 21-12-2017
டெல்லி படியாலா நீதிமன்றத்துக்கு வந்தடைந்தார் மு.க.அழகிரி
09:56 21-12-2017
முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராஜா, டெல்லி படியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு வந்தடைந்தார்