அனுமதியின்றி பேனர் வைக்க மாட்டோம் என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பேனர் வைக்க மாட்டோம் என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  பேனர் விவகாரத்தில் உயர்நீதிமற்ற உத்தரவை பின்பற்றுவோம் எனவும் திமுக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட விரோத பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை திமுக தவறாமல் பின்பற்றும் எனவும், 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுக அளித்த உத்தரவாதமும் பின்பற்றப்படும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி பேனர் விழுந்து லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தனது வீட்டு திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனரால் இந்த விபத்து நேரிட்டது. இதுதொடர்பான வழக்கில், பேனர் வைத்தவரின் பெயரை வழக்கில் ஏன் சேர்க்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.


இந்த நிலையில், ஜெயகோபாலின் பெயர் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டது. அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.