Udhayanidhi Stalin: ஜெயலலிதா, சசிகலாவை கம்பி எண்ண வைத்தது திமுக சட்டத்துறை - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
ஜெயலலிதா ஏ1, சசிகலா ஏ2 என கம்பி எண்ண வைத்தது திமுகவின் சட்டத்துறை என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் ஒன்றியமும் மாநிலமும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ஜெயலலிதா ஏ1, சசிகலா ஏ2 என கம்பி எண்ண வைத்தது திமுகவின் சட்டத்துறை, ஜெயலலிதா கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்றார். ஆனால் அவருக்குப் பின்னாலேயே எதிரிகள் இருந்துள்ளனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டிற்கு தேவை ஆன்மீக மாடல்... தோல்வியுற்ற மாடல் திராவிட மாடல் - எல். முருகன்!
அந்த விழாவில் அவர் பேசும்போது, " திமுகவில் எப்போதும் நம்பர் ஒன் அணி என்றால் அது சட்டத்துறை தான். இளைஞர் அணி, மாணவர் அணி என்றெல்லாம் நானே கூறியிருக்கிறேன். ஆனால், திமுகவின் சட்டத்துறை கடினமான காலங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஏ1 ஆகவும், அவருடைய நெருங்கிய தோழி சசிகலாவை ஏ2 ஆகவும் கம்பி எண்ண வைத்தது இந்த சட்டத்துறை தான். அண்ணாவுக்கு அருகில் உறங்க வேண்டும் என்ற கலைஞரின் கடைசி ஆசையை கடுமையாக பாடுபட்டு, நிறைவேற்றி காட்டியது இந்த சட்ட துறை தான்.
இரண்டு மாதங்களுக்கு முன் இங்கிருக்கும் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்றார். தமிழ்நாடு என இருக்க வேண்டாம். தமிழகம் என மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். தற்போது திமுக ஆட்சியில் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ இருந்திருந்தால் தற்போது தமிழ்நாட்டின் பெயரையே மாற்றி இருப்பார்கள். அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் என்ன நிலைமை இருந்தது. அதிகாரக் குவியல். கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் தெரியவில்லை என்றார். இறுதியில் அவர்களது எதிரிகள் எல்லாம் அவர்கள் பின்னாலேயே இருந்துள்ளார்கள். இதுதான் அதிகாரப் பரவலுக்குமான அதிகாரக் குவியலுக்குமான வித்தியாசம்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ