தமிழகம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் நெல்லை டவுன் லட்சுமி மஹால் வைத்து திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் உள்ளிட்ட திமுகவின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மூத்த நிர்வாகிகளுக்கு ரூபாய் 5000 பொற்கிழி மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை வழங்கி கௌரவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஓராண்டு கொண்டாட  தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, நெல்லை மாநகர திமுக சார்பில் 100 திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியுடன் கலைஞர் சிலையும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொற்கிழி வழங்கும் திட்டம் தொடங்கும். அரசியல் பூகம்பங்கள் வந்தாலும் எத்தனை மோடிகள் வந்தாலும், எத்தனை அண்ணாமலை வந்தாலும் அவர்களது திட்டங்களை தவிடு பொடியாக்கும் தொண்டர்கள் திமுகவில் உள்ளனர். 


மேலும் படிக்க | அதிமுகவின் மதுரை மாநாடு: எஸ்.பி.வேலுமணி சூளுரை


மராட்டிய மாநிலத்தில் நடக்கும் சம்பவத்தை பார்க்கும்போது பாட்னா எதிர்க்கட்சி கூட்டத்தைக் கண்டு மோடி பயந்துவிட்டார் என்பது தெரிகிறது. மகாராஷ்டிராவில் கேவலமான விளையாட்டை பாஜக விளையாடி வருகின்றனர். மோடியின் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. மராட்டியம் சிவாஜி பிறந்த மண். கர்நாடகத்தில் பாஜக தோல்வியை தழுவியதுபோல் மராட்டிய மாநிலத்திலும் 2024-ல் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். 


அஜித் பவர் போன்றோர் தமிழகத்தில் உள்ளனர் என அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை ஒரு பொருட்டே கிடையாது. அவரைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள். அண்ணாமலைக்கு தமிழக அரசியல் பற்றி என்ன தெரியும். நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் காமராஜர் குறித்தும் அண்ணாமலை பேசியுள்ளார். குடியாத்தம் தேர்தல் முதல் காமராஜர் அடக்கம் வரை திமுக அனைத்து உதவிகளையும் காமராஜருக்கு செய்துள்ளது. தமிழக ஆளுநர் தொடர்ந்து சனாதனம் குறித்து பேசி வருகிறார் என்ற கேள்விக்கு தமிழகம் பெரியார் பிறந்த மண், அண்ணாவால் வளர்ந்த மண், கலைஞரால் பாதுகாக்கப்பட்ட மண். இங்கு சனாதனத்திற்கு கடுகளவும் இடம் கிடையாது என அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ