#Sterlite ரசாயன கழிவு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் -சந்திப் நந்தூரி!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர். இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது தற்போது ஆலையிலிருந்து ரசாயனக் கழிவுகள் வெளியே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி, சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமிப்பு கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் தலைமையில் அமிலம் அகற்றப்படுகிறது.