அதிமுக-விற்கு ஒருபோதும் நான் களங்கம் ஏற்படுத்த விரும்ப மாட்டேன் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.ஆர்.கே. நகர் தேர்தல் தோல்வி தொடர்பாக நான் கடிதம் எழுதியது கட்சியின் உள்விவகாரம் என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வருடம் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் இந்த மாதம் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 50.32 சதவீதம் வாக்குகள் பெற்று டிடிவி தினகரன், ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்றார்.


அ.தி.மு.க. சார்பில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான மதுசூதனன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தினகரன் யாரும் எதிர்பாராத வெற்றியை பெற்றார். 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனன் தோல்வியை தழுவியது கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தி.மு.க. வேட்பாளரான மருதுகணேஷ் டெபாசிட்டை இழந்து பரிதாபமான தோல்வியை தழுவினார்.


இந்த நிலையில் தனது தேர்தல் தோல்விக்கு ஜெயக்குமாரே காரணம் என்று மதுசூதனன் குற்றம் சாட்டி உள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அவர் 14 கேள்விகளை கேட்டு ஆவேச கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்.


அந்த கடிதத்தில் எனது தோல்விக்கு அமைச்சர் ஜெயக்குமார்தான் காரணம் என்று மதுசூதனன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இந்த தோல்வி குறித்து ஆய்வு நடத்தவில்லை என்று குற்றம்சாட்டி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுசூதனன் கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுசூதனன் இன்று கூறியுள்ளதாவது:- ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி தொடர்பாக நான் கடிதம் எழுதியது அதிமுகவின் உள்விவகாரம். இதுபற்றி ஊடகங்களிடம் விவாதிக்க முடியாது. அதிமுகவிற்கு களங்கம் ஏற்படுத்த எப்போதுமே விரும்பியதில்லை. அதிமுகவை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். எனவே எங்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த எப்போதும் விரும்ப மாட்டேன். அதிமுக உருவான போது கருணாநிதியால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தவன் நான்’’ எனக் கூறினார்.