Makkal Kurai Theerkkum Naal Latest News: நாடு முழுவதும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறக்கூடிய வகையில் அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளும், சலுகைகளும் குறித்தும் தகவல்கள் வெளியிடப்படும். அந்த வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறக்கூடிய வகையில் அவர்களது குறைகளை தீர்க்கும் வண்ணம் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் அடிப்படையில் ஓய்வூதியர்கள் குறை தீர் கூட்டத்தில் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும். அந்த வகையில் கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டை கண்காணி அலுவலகத்தில் வரும் ஜனவரி மாதம் எட்டாம் தேதி (புதன்கிழமை) கோட்ட அளவிலான அஞ்சலக ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.


ஓய்வூதியர்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை "பென்ஷன் அதாலத்" (Pension Adalat) என தபால் உரையின் மீது எழுதி அனுப்பலாம். அதில் ஓய்வூதிய கணக்கு எண் உட்பட பிற விவரங்களை முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும் என்று கிருஷ்ணகிரி அஞ்சல்கோட்டை கண்காணி ராகவேந்திரன் தெரிவித்துள்ளார். 


அடுத்ததாக ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறைகேட்புக் கூட்டமானது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கத்தில் ஜனவரி மாதம் எட்டாம் தேதி (புதன் கிழமை) காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. ஓய்வூதிய இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று,  ஓய்வூதியர்களின் குறைகளை கேட்க உள்ளனர்.


தமிழக அரசுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தங்கள் ஓய்வூதிய பலன்கள் குறித்து எந்தவித குறைகள் இருந்தாலும், ஏற்கனவே மனுவாக எழுதி கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்திருந்தால், ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் குறைகேட்புக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைக்கு பதில் பெறலாம். 


மேலும் படிக்க - ஓய்வூதியர் அடையாள அட்டை புதிய அப்டேட் தொடர்பாக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு


மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% ஓய்வூதிய உயர்வு: மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள், முழு விவரம் இதோ


மேலும் படிக்க - கடைசி காலத்தில் கூடுதல் பென்ஷன் வேண்டுமா? ஓய்வூதியதாரர்கள் இதை செய்தால் போதும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ