TN Govt Employees September Salary: தமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு. இதன் காரணமாக  மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பண்டிகை நாட்களுக்கு சில நாட்களே உள்ள நிலையில், மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி, அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 15,000 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் சம்பளம் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் மத்திய அரசு எனக்கூறப்படுகிறது.


சமக்ரா சிக்ஷா திட்டத்தின் (ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்) கீழ் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் மத்திய அரசு சார்பில் நிதி விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.573 கோடி நிதி இன்னும் கொடுக்காமல் இருப்பதால், நிதி பற்றாக்குறை காரணமாக 15,000 பேரும் சம்பளத்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.


பள்ளி கல்வித்துறைக்கு என மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் தனித்தனியாக திட்டங்கள் உள்ளன. அந்தந்த அரசின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வருகின்றன. மறுபுறம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பங்களிப்பில் "ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்" (Samagra Shiksha Scheme) செயல்படுத்தப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க - TN School Holidays | காலாண்டு விடுமுறை! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்த முக்கிய அப்டேட்


இந்த ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் அரசு மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்திற்கு ரூ.3586 கோடி நிதி ஒதுக்க வேண்டும். அதில் 60 விழுக்காடு மத்திய அரசின் பங்காகவும், 40 விழுக்காடு மாநில அரசின் பங்காகவும் நிதி ஒதுக்கப்படுகிறது. 


மொத்தம் ரூ.3586 கோடியில் 60% தொகையான ரூ. 2152 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும். அதில் முதல் காலாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய ரூ. 573 கோடி நிதியை இன்னும் விடுவிக்கப்படவில்லை. மறுபுறம் 40% தொகையான ரூ. 1434 கோடி மாநில அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி விடுவிக்கப்படமல் இருப்பதற்கு காரணம், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாமல் இருப்பது தான் எனக் கூறப்படுகிறது. 


நிதி விடுவிக்காத நிலையில், தமிழக அரசு சார்பில் பலமுறை பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு மவுனம் காக்கிறது. இதனால் 15,000 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் மாநில கல்வித்துறை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கணு வேண்டும் என்றால்,  கிட்டத்தட்ட ரூ.25000 கோடி நிதி அவசியம். 


செப்டம்பர் மாதம் சம்பளம் இன்னும் விடுவிக்கப்படாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் போர்க்கால் அடிப்படையில சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து சம்பளத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.


15000 பேருக்கும் எப்போது செப்டம்பர் மாசம் சம்பளம் கிடைக்கு என்ற மிகப்பெரிய ஒரு கேள்வி எழுந்துள்ளது.


மறுபுறம் "அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை" தேசிய கல்விக்கொள்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க - Quarterly Exam Holidays | காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ் வரப்போகிறது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ