பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா? என மத்திய ரசாயனத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதன் படி, மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 
 
இதையடுத்து, நெகிழிக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.