Domestic violence:பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொன்ற மகள்
ஆண் ஆதிக்க குடும்ப கட்டமைப்பில் நடைபெறும் குடும்ப வன்முறைகள் வெளியாகும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. அதன் அண்மை உதாரணமாக, தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆண் ஆதிக்க குடும்ப கட்டமைப்பில் நடைபெறும் குடும்ப வன்முறைகள் வெளியாகும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. அதன் அண்மை உதாரணமாக, தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை கிராமத்தை சேர்ந்த ரவி வியாபாரம் செய்துவந்தார். மனைவி இறந்தநிலையில் 17 வயது மகளுடன் வசித்து வந்த ரவி, மார்பில் கத்திக்குத்து பட்டு ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
கொலை சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்ததும், அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தந்தை ரவியை அவரது மகளே குத்தி கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
ரவி தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார் என்றும், நேற்று முன்தினம் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் மகள் போலீசாரிடம் தெரிவித்தார்.
Also Read | சாப்பாடு போட மறுத்த தாயை கத்தியால் குத்திக் கொன்ற கொடூர மகன்
செய்வதறியாமல் திகைத்த சிறுமி, தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக, கையில் கிடைத்த கத்தியை எடுத்து தந்தையில் மார்பில் குத்தியிருக்கிறார். தன்னை தற்காத்துக் கொள்வதற்காக சிறுமி குத்தியதில், ரவி உயிரிழந்துவிட்டார்.
தந்தையே மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகளே தந்தையை குத்தியதை ஒப்புக் கொண்டதால், சிறுமியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
ரவியின் மகள் 12ம் வகுப்பு படித்து மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப வன்முறையைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்துள்ளது. ஆனால், தானாய் பார்ந்து திருந்தாவிட்டால் சட்டங்கள் வெறும் காகிதங்களில் மட்டும் தான் இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR