சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.  முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் வரை பயணிகள் சேவை நடந்து வருகிறது. 


இந்த வழித்தடத்தில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.


இதற்காக புதிய ‘சிப்’ பொருத்திய கைக்கடிகாரத்தை ‘டைட்டன்’ வாட்ச் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் மூலம் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் எளிதில் வந்து செல்ல முடியும்.


நுழைவு பாதையில் உள்ள மிஷினில் கைக்கடிகாரத்தை காண்பித்தால் தானாக கதவு திறக்கும். இந்த கடிகாரத்தின் விலை ரூ. 1,000 என நிர்ணயிக்கப்படவுள்ளது.


இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்.,  சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக விரைவில் ‘ஸ்மார்ட் வாட்ச்’ அறிமுகம் செய்யப்படவுள்ளது. நவீன ‘சிப்’ பொருத்திய இந்த கைக்கடிகாரத்தை ‘டைட்டன்’ நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.


இந்த கடிகாரத்தை மெட்ரோ பயணிகள் கையில் அணிந்து கொண்டு மெட்ரோ நுழைவு பாதையில் சென்றால் கதவு தானாக திறக்கும். இந்த புதிய அம்சத்தின் மூலம் பயணிகள் விரைவாக நிலையத்துக்குள் செல்ல முடியும். ரூ. 1,000 முதல் ரூ, 1,500 வரை பல்வேறு மாடல்களில் இந்த கடிகாரங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.


தற்போது டெல்லியில் மெட்ரோ பயன்படுத்தும் நபர்கள், டெல்லி மெட்ரோவால் அளிக்கப்படும் ஸ்மார்ட் அட்டையை கொண்டு எளிதாக பயணம் செய்து வருகின்றனர். இந்த அட்டையை பயன்படுத்துபவர் டிக்கெட் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை., மெட்ரோ நுழைவு வாயிலில் சென்று அட்டையை காண்பித்தால் போது, வழித்தடம் தானாக திறந்துவிடும். இந்நிலையில் இவ்வாறான செயல்முறையை சென்னை மெட்ரோ விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.