தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. 2024 தீபாவளி பரிசு அறிவிப்பு வருகிறது..!
Double Jackpot For Tamil Nadu Govt Employees: தீபாவளி போனஸ், அகவலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் அளிக்க தமிழ்நாடு அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tamil Nadu Government Diwali 2024 Prize: 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு இரண்டு முக்கியத் தகவல்கள் அளிக்க மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. அதுக்குறித்த விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களும், மாநில அரசு ஊழியர்களும் இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவலைப்படி உயர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கான முக்கியமான அறிவிப்பு குறித்து, இந்த மாதம் அதாவது அக்டோபர் மாதத்தில் வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் அகவலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து தமிழக அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் வழங்குவதற்கு தமிழக அரசு தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அகவலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் ஆகிய இரண்டு பரிசுகள் குறித்து முக்கியமான தகவல்களை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தமிழக அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இதற்கு தேவையான அனைத்து பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருவதால், இந்தமுறை சிறப்பான தீபாவளி பரிசை அளிக்க தமிழக அரசு ஆயுத்தமாகி வருகிறது.
அகவலைப்படி மற்றும் தீபாவளி போனஸ் உயர்வு தொடர்பான அனைத்து வகையான ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அதிகாரிகள் தயாரித்து வருகிறார்கள். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒப்புதல் வழங்கிய பின்பு, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.
மத்திய அரசு ஊழியர்களை பொறுத்த அளவில், அகவலைப்படி தற்போது 50% எட்டியிருக்கிறது. இந்த ஆண்டு இரண்டாவது அகவலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டால் அது 53% அல்லது 54% ஆக உயரும். ஏனென்றால் இந்த முறை 3% அல்லது 4% அகவலைப்படி உயர்வு இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மத்திய அரசை ரயில்வே துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில கூடிய விரைவில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பும், அகவலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க - பென்ஷன் தேதியில் மாற்றம்.. வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் போட்ட அதிரடி உத்தரவு
மேலும் படிக்க - விரைவில் தீபாவளி 2024 பரிசு: குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிறது புதிய அறிவிப்பு!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ