இரட்டை இலை விவகாரம்: இபிஎஸ் அணி கூடுதல் ஆவணம் தாக்கல்!
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது அனைவரும் அறிந்ததே. மேலும் இது தொடர்பான வழக்கினை வரும் அக்., 31-ம் தேதிக்குள் முடிவுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்னதாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதனால், இரட்டை இலை சின்னம் தொடர்பான ஆவணங்களை அதிமுக-வின் இரு அணியினரும் இந்த மாதம் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இபிஎஸ் அணி தங்கள் தரப்பு கூடுதல் ஆவணங்கள் இன்று தாக்கல் செய்தனர்.
அதேவேளையில், தினகரன் அணி, ஆவணங்கள் தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முன்னதாக கோரிக்கை வைத்தது.
ஆனால், தினகரன் அணிக்கு அவகாசம் அளிக்க முடியாது எனவும், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்றும், நேற்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.