சேலம் ஆத்தூரை அடுத்து உள்ள ஆனைவாரி அருவியில் ஆர்ப்பரிகும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். திடீரென அதிகரித்த வெள்ளப்பெருக்கால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அருவிக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலத்தின் குற்றாலம் என்று அழைக்கப்படும் ஆனைவாரி அருவி, கல்வராயம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாத் தலமாக மக்களிடையே பெரும் பிரபலமாக உள்ள இந்த இடத்தை வனத்துறை நிர்வகித்து வருகிறது. இங்கு அருகில் உள்ள பகுதிகள் மட்டுமல்லாமல், தொலைதூற பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். 


சமீபத்திய நாட்களில் சேலம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழையும் (Rain), சில இடங்களில் சுமாரான மழையும் பெய்த வண்ணம் உள்ளது. கல்வராயன் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆனைவாரி அருவியில், தற்போது எப்போதும் இருப்பதை விட அதிக அளவில் நீர் கொட்டிக்கொண்டு உள்ளது. 


ALSO READ: நடிகர் விஜய் தேர்தல் களத்தில் குதிப்பது எப்போது; வெளியானது முக்கிய தகவல்


இந்த நிலையில், அக்டோபர் 24, அதாவது ஞாயிறன்று, இங்கு பலர் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு போன்ற நிலை ஏற்பட்டது.  செந்நிறத்தில் நீர் கொட்ட ஆரம்பித்தது. உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த வனத்துறையினர், உடனடியாக அங்கிருந்த மக்களை வெளியேறுமாறு கூறினர்.


எனினும், திடீரென் நீரின் வேகம் அதிகரிக்கவே, அங்கு குளித்துக்கொண்டிருந்த குழந்தை, ஒரு பெண் உட்பட 5 பேர் மறுபக்க கரையில் ஒதுங்கினர். அங்கிருந்த இருவர் குழந்தை மற்றும் அந்த பெண்ணை பாதுகாப்பாக காப்பாற்றி கயிறு மூலம் மேலே உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பினர். 


காப்பாற்றிய இருவரும் மேலே ஏற முயற்சித்தபோது, வழுக்கி கீழே விழிந்தனர். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பதறி கத்தத் துவங்கினர். வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்ட இருவரும், சற்று தூரத்தில் கரை ஒதுங்கி தப்பித்து விட்டனர். 


மனதை பதபதைக்க வைக்கும் சம்பவத்தின் வீடியோ இதோ:



எனினும், இந்த பகுதியில் திடீரென அதிகரித்த நீர் வரத்து அங்கு குளித்துக்கொண்டிருந்த மக்களுக்கு பெரும் ஆபத்தாகவும் அமைந்திருக்கலாம். நிலைமையை கருத்தில்கொண்டு அந்த பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ: பள்ளி மாணவர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR