Weather Updates: வடகிழக்கு பருவமழை இன்று முதல் ஆரம்பம்

தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் வரும் 26 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது மேற்கு நோக்கி நகர்ந்து அதனை அடுத்த 48  மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். 

Written by - அதிரா ஆனந்த் | Edited by - Shiva Murugesan | Last Updated : Oct 25, 2021, 01:33 PM IST
Weather Updates: வடகிழக்கு பருவமழை இன்று முதல் ஆரம்பம் title=

சென்னை: தென்மேற்கு பருவமழை இந்தியாவில் இருந்து விலகியுள்ளது. இன்று முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பம். தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகாவில் தொடங்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், திருப்பூர், கரூர், புதுக்கோட்டை, திருவாரூரில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்:
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவாரூர் மாவட்டங்களில்ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை வானிலை எப்படி இருக்கும்?
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மேலடுக்கு சுழற்சி:
தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் வரும் 26 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது மேற்கு நோக்கி நகர்ந்து அதனை அடுத்த 48  மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். 27,28 ஆகிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். 

27.10.2021 நிலவரம்:
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

28.10.2021 மற்றும் 29.10.2021 நிலவரம்:
டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள்  மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும்,  உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சென்னை வானிலை எப்படி இருக்கும்?
அடுத்த  48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
27.10.2021 மற்றும் 28.10. 2021 ஆகிய நாட்களில் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
புலிப்பட்டி (மதுரை) 11, விராலிமலை (புதுக்கோட்டை) 10, குடிமியன்மலை (புதுக்கோட்டை) 9, கடம்பூர் (தூத்துக்குடி), அவிநாசி (திருப்பூர்) தலா 8, இடையப்பட்டி (மதுரை) 7, திருப்பூர் (திருப்பூர்), சோலையார் (கோவை) தலா 6, அன்னவாசல் (புதுக்கோட்டை), திருவாரூர் (திருவாரூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), சித்தம்பட்டி (மதுரை), பேரையூர் (மதுரை), கிருஷ்ணராயபுரம் (கரூர்), அம்முண்டி (வேலூர் ), கீரனூர்  புதுக்கோட்டை), நத்தம் ( திண்டுக்கல்), நாமக்கல் (நாமக்கல்) தலா 5, மதுரை தெற்கு (மதுரை மதுரை), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), சின்னகலார் (கோயம்புத்தூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), கொடைக்கானல் (திண்டுக்கல்), காரியாபட்டி (விருதுநகர்), மேலூர் (மதுரை), மாயனூர் (கரூர்), தேவாலா (நீலகிரி), அன்னூர் (கோயம்புத்தூர்) தலா 4, ஓடாஞ்சத்திரம் ( திண்டுக்கல்), மானாமதுரை (சிவகங்கை ), திருப்புவனம் (சிவகங்கை ), தல்லாகுளம் (மதுரை), செங்கம் (திருவண்ணாமலை), ஆவுடையார்கோயில் (தொலை புதுக்கோட்டை), தோகமலை (கரூர்), எடப்பாடி (சேலம்), சிவகங்கை ( சிவகங்கை), அரண்மனைபுதூர் (தேனி), போளூர் (திருவண்ணாமலை), ஆற்காடு (ராணிப்பேட்டை), வத்தலை அணைக்கட் (திருச்சி), தாராபுரம் ( திருப்பூர்), காமாட்சிபுரம் ( திண்டுக்கல்) தலா 3,

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் முனைவர் நா. புவியரசன் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News