ஈழத்தமிழர்களுக்கு தமிழக அரசு குடியுரிமை பெற்றுத்தர வேண்டும் - திராவிட கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை!
`ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கும்(Tamilnadu government) ,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்(Lokshaba member) `திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேணீடுகோள் விடுத்துள்ளார்.
"ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கும்(Tamilnadu government) ,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்(Lokshaba member) "திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேணீடுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் தங்குமிடம் சரியான பராமரிப்பின்றி, அவர்களுக்குப் போதிய வசதி வாய்ப்புகளை அளிக்காது, முந்தைய ஆட்சியில் அவர்கள் எப்படியோ வாழ்ந்த நிலையை மாற்றுபவர் தமிழக முதல்வர். அவர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘‘ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர்’’ என்று உரத்த குரலில் முழங்கியது, அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு 317.40 கோடி ரூபாய் ஒதுக்கி, இலங்கைத் தமிழர் நலன்களைப் பேணிக் காத்திட - அகதிகள் முகாம் என்பதில் ‘அகதி’யை அகற்றி, ‘‘மறுவாழ்வு விடுதிகள்’’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்மூலம் முதல்வர் இலங்கைத் தமிழர்களுடனான நமது உறவு தொப்புள்கொடி உறவு என்றும் அறுந்துபடாத - அறுக்கப்பட முடியாத - அறுக்கப்படக் கூடாத உறவு என்பதையும் உறுதிப்படுத்தி உலகத்துக்கு அறிவித்துள்ளார். திராவிடம்(Dravidam)என்பதுடன் ‘யாவரும் கேளிர்’(Yavarum kezhir) என்பதை வாழ்விலக்கணக்கமாக வாழும் வகை செய்யும் அருந்தத்துவம் என்பதைப் பிரகடனப்படுத்தி விட்டார்.
ALSO READ வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்: முதல்வருக்கு வைகோ பாராட்டு
ஈழத் தமிழர்களுக்குக்(Ezham Tamizhargal) குடியுரிமை பெற்றுத் தர, நமது தமிழக அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது, மனிதாபிமான அடிப்படையில் மிகமிக முக்கியமானதாகும். அதனையும் இலக்காக வைத்து அம்மக்களும் எம் மக்களே என்ற நிலையை உருவாக்குதல் முக்கியம்'' என்று தமிழக அரசுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர்களுக்கு தமிழக அரசு குடியுரிமை பெற்றுத்தர வேண்டும்.திராவிட கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR