ஒன்றிய அளவில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை தொடங்கப்படும் - உதயநிதி ஸ்டாலின்!
திமுக கட்சி சார்பில் ஒன்றிய அளவில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை தொடங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரில் கலைஞர் அறிவாலயத்தில் மாநில திமுக இளைஞரணி சார்பில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது, இந்த நேர்காணலில் அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தவர்களிடம் விபரங்களை கேட்டறிந்து அவர்களின் கட்சிப் பணி குறித்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் கேட்டறிந்தனர்.
மேலும் படிக்க | டெல்டா மாவட்டங்களை சீரழிக்க முயற்சி! மத்திய அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு!
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது இளைஞர் அணி தலைவராக நான்கு வருடத்திற்கு முன்பு பொறுப்பேற்ற போது தொகுதிக்கு பத்தாயிரம் இளைஞர்கள் சேர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டு 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது, தற்போது கட்சியில் உறுப்பினராக ஒரு கோடி பேர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது, முதல்வரின் உத்தரவுப்படி திராவிட மாடல் பயிற்சி பட்டறை தொகுதிவாரியாக முடிந்து அடுத்ததாக இன்னும் 15 தினங்களுக்குள் ஒன்றிய அளவில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை பணிகளில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பி பழனிமாணிக்கம், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ