போதையில் மூதாட்டியிடம் முத்தம் கேட்ட வாலிபர்.. கொடுக்காததால் இரும்பு கம்பியால் தாக்கு
Crime New Today: ஓமலூர் அருகே பரபரப்பு சம்பவம். மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கிய போதை வாலிபர். போலீசார் கைது செய்தனர்.
Crime In Tamil Nadu: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மோரூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன் கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த சாந்தா என்ற மூதாட்டி இடம் முத்தம் கேட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அவரிடம் சண்டை போட்டுள்ளார். ஆனால் தான் முத்தம் கேட்டு கிடைக்காத விரக்தியில் மதுபோதையில் இருந்த மாதையன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மூதாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் கூச்சலிட்ட மூதாட்டியை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். அதன் பின்னர் அவரை பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாதையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது தான் முழுபோதையில் இருந்ததால் தவறாக நடந்து கொண்டதாகவும் தன்னை மன்னித்து விடுமாறும் மாதையன் கேட்டுள்ளார். ஆனால் மாதையன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மூதாட்டியிடம் முத்தம் கேட்ட சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ