தமிழ்நாட்டில் நேற்றை விட இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,73,352 ஆக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இன்று 194 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சென்னையில் இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது.


தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 223 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 194 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை கொரோனா தொற்று பாதிப்பில் தினசரி ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.


இந்நிலையில், தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்ச பாதிப்பு உள்ள கோயம்பத்தூரில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய இடங்களில் உள்ள, அதிகம் அளவு மக்கள் வருகை தரும் 9 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் (TASMAC) மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி கோயம்புத்தூரில் நகர பகுதியில் உள்ள 100 அடி வீதி, துடியலூர் சந்திப்பு, கிராஸ் கட் சாலை, புரூக்பீல்டு மால் ஆகிய 4 பகுதிகளில் இருக்கும் 9 டாஸ்மாக் கடைகளை மூட கோவை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்திரவிட்டுள்ளார்.


ALSO READ | தமிழ் ‘குடி’ மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கின்றன


ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளான மருந்தகம், காய்கறி கடைகளை தவிர பிற கடைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டை பொறுத்த வரை புதிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால், கொரோனா (Corona Virus) மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 


இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் மக்கள் அதிகம் கூடும் வாய்ப்பு உள்ளதால் கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் பக்தர்களுக்கு, கோவில்களில் தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கவில்லை.


Also Read | Covovax இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகமாகிறதா; SII கூறியது என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR