தமிழ் ‘குடி’ மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கின்றன

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொற்று பரவல், உச்சத்தில் இருந்த போது தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட முழு ஊரடங்கு போடப்பட்டு பின்னர் படிப்படியாக தளர்த்தப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 17, 2021, 10:52 PM IST
தமிழ் ‘குடி’ மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கின்றன title=

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ( Corona Second Wave) தொற்று பரவல், உச்சத்தில் இருந்த போது தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட முழு ஊரடங்கு போடப்பட்டு பின்னர் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதில் சென்ற மாதம் மதுகடைகள்  திறக்கப்பட்டன. அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விற்பனை தொடங்கப்பட்டது. 

முதலில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைவாக இருந்த 27 மாவட்டங்களில், அனுமதி வழங்கப்பட்டு, விற்பனை தொடங்கப்பட்டது. பின்னர் மேலும் 11 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு, முந்தைய ஆட்சி காலத்தில் முழு ஊரடங்கு முடிந்து மதுக்கடைகள் திறக்கப்பட்ட சமயத்தில், மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டன. மது பானங்கள் அளவிற்கு ஏற்ப ரூ.10,  ரூ.20, ரூ.40,  என்ற அளவிலும், பீர் விலை ரூ.10  என்ற அளவிலும் அதிகரிக்கப்பட்டன. அதே போன்று இந்த ஆண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. 

 மதுபானங்களின் விலையை ₹50 வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்த உடன் விலை உயர்வு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.  விலை உயர்வுக்கு முன்னதாக, பழைய சரக்குகளை விற்று தீர்க்குமாறு அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுபானங்களை  தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து சரக்குகள் வரத்தும் குறைந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.  எனினும் இந்த தட்டுப்பாடு, ஒரு வாரத்தில்  சீராகி விடும் எனவும் தகவல்க தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் (Tamil Nadu) ) ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு படிப்படியாக கொண்டு அமல்படுத்தப்படும் என திமுக (DMK) கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | தமிழ் ‘குடி’ மகன்களின் சாதனை: ஒரே நாளில் ₹164.87 கோடியை கடந்த மது விற்பனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News