கனமழை காரணமாக ராமநாதபுரம் , சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை வானிலை ஆய்வு மையம்,  தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


தமிழகம் மற்றும் புதுவையில் நாளை அதிதீவிர மழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது இந்திய வானிலை மையம். வானிலை மையம் விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கைப்படி ஒரே நாளில் 22 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்யு என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.



இந்த நிலையில், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அக்டோபர் 22,23,24 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவித்துள்ளார்.