கனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..!
கனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!
கனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என அவர் தெரிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுவை, கடலூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று புவியரசன் கூறினார். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.
மேலும், மீனவர்களை பொறுத்தவரையில், லட்சத் தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் புதுச்சேரிக்கு நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.