நீலகிரி: கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  சுற்றுலா பயணிகள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் மதுப் பாட்டில்களில் உள்ள மதுவை உணவென நினைத்து குரங்கு ஒன்று குடிக்கும் வீடியோ காட்சி பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீலகிரி மாவட்டத்திற்கு சமவெளிப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.குறிப்பாக மலைப்பாதை வனப்பகுதியைக் கொண்டுள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டமும் காணப்படும் குறிப்பாக மலைப்பாதையில் ஏராளமான குரங்குகளும் சுற்றுலாப் பயணிகள் வீசிச் செல்லும் உணவுக்காக காத்திருக்கின்றன.


ALSO READ | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!


இந்நிலையில் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் கோத்தகிரி தேசிய நெடுஞ் சாலையில் குரங்கு ஒன்று உணவு என நினைத்து பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள தண்ணீரையும் மது பாட்டிலில் இருந்த மதுவையும் குடிக்கும் காட்சி அனைவரிடத்திலும் பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


வீடியோவை இங்கே காணலாம்: 



மலை மாவட்டத்துக்கு வந்த செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்கு பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவைகளை வனப்பகுதியில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR