கொடைக்கானலை தொடர்ந்து ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!
உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் தொட்டபெட்டா மலை சிகரம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கோத்தகிரி சாலையில் உள்ள தொட்டபெட்டா சந்திப்பு சாலையிலிருந்து தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் இதை சீரமைக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இந்த சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளபட உள்ளது, இதனால் இன்று 11 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. சாலைப் பணிகள் முடிந்த பின் தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | “விஜய்ன்னு சொல்லாதீங்க..தளபதின்னு சொல்லுங்க..” புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ்..!
கடந்த மாதம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில இடங்கள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் மழை பெய்யாது போனதால் கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவிக்கு வரும் நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று பிற்பகல் மற்றும் இரவு நேரத்தில் அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
எனவே கடந்த சில தினங்களாக கோடை காலத்தில் அடிக்கும் வெயிலை போன்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க நீர்வரத்து அதிகரித்து ஆர்பரித்து கொட்டும் கும்பக்கரை அருவியின் நீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து வெப்பத்தின் தாக்கத்தை தனித்து செல்கின்றனர்.
மேலும் படிக்க | மூட நம்பிக்கைகளை திராவிட இயக்கங்கள் எதிர்க்கும்: ராஜன் செல்லப்பா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ