’மதிமுகவை திமுகவுடன் இணைந்துவிடுங்கள்’ வைகோவுக்கு வந்த கடிதம்: துரை வைகோ விளக்கம்
கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த கட்சியினர் இனியும் ஏமாறாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுமாறு மதிமுக அவைத்தலைவர் வைகோவுக்கு எழுதியிருக்கும் கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்தவர்கள் இனிமேலும் இழக்காமல் இருக்க மதிமுகவை, அதன் தாய் கழகமான திமுகவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆதங்கத்துடன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், " தங்களின் சமீபகால நடவடிக்கைகளால், கட்சிக்கும், தங்களுக்கும், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு, தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதை, கட்சியினர் அறிந்துள்ளனர். அதனால், தமிழகம் முழுவதும் பழைய உறுப்பினர்கள் கூட, தங்களை புதுப்பித்துக் கொள்ள முன்வரவில்லை. புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில், நிர்வாகிகளிடம் தொய்வு ஏற்பட்டு ஆர்வம் குறைந்துள்ளது. ம.தி.மு.கவின் நிலைமை எப்படி உள்ளது என்பதை, தங்களின் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்.
மேலும் படிக்க | Kamal Haasan: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? கமல்ஹாசன் ஆலோசனை
கடந்த 30 ஆண்டுகளாக, கொங்கு மண்டலம், ம.தி.மு.கவின் கோட்டை என பேசி வருகிறீர்கள். ஆனால், கொங்கு மண்டலத்தில் உள்ள மூன்று மாநகராட்சிகளிலும், மாநகர மாவட்ட செயலர் தேர்தலை நடத்தி முடித்து விட்டீர்கள் என சொல்லப்படுகிறது. திருப்பூர், ஈரோடு மாநகராட்சி வார்டுகளிலும், போலி பெயர்களில் உறுப்பினர்களை பதிவு செய்து, தேர்தல்களை நடத்தி முடித்துள்ளீர்கள். கொங்கு மண்டலத்தில் ம.தி.மு.கவின் நிலை இதுவென்றால், வேறு மாவட்டங்களை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கடந்த 30 ஆண்டுகளாக, உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி, வாழ்க்கையை இழந்த கட்சியினர், மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, கட்சியை, தாய்க் கட்சியான தி.மு.கவில் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது" என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள துரை வைகோ, மதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த அவைத் தலைவர் துரைசாமி நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது கருத்தை ஜனநாயக முறைப்படி தெரிவித்துள்ளதாகவும், இது குறித்து பொதுகுழு தான் முடிவு செய்யும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க | மெரினாவில் பேனா நினைவு சின்னம்! அனுமதி வழங்கியது மத்திய அரசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ