தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், தேர்தல் பிரசாரத்தின் போது கண்ணீர் விட்டு சம்பவம் பொதுமக்களை நெகிழச் செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று இரவு கடகத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அன்புமணி ராமதாஸ் சென்று கொண்டிருந்த போது, அவரின் வாகனத்தை பார்த்த குழந்தைகள் பின்னால் ஓடி வந்துள்ளனர். இதனை கண்ட அன்புமணி வாகனத்தை நிறுத்தி குழந்தைகளிடம் பேசினார்.


இதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், தன்னையும் அறியாமல், கூட்டத்தின் நடுவே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இச்சம்பவம் அங்கு கூடிநின்ற பொதுமக்களை கண்கலங்க வைத்துள்ளது.