தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல, E-பாஸ் முறை அமலில் உள்ளது. திருமணம், இறுதிச் சடங்கு, அவசர மருத்துவ தேவை போன்றவற்றுக்கு செல்ல விரும்புவோருக்கு மட்டும் E-பாஸ் வழங்கப்படுகிறது. இதனால், வெளியூர் செல்ல விரும்புவோர், பெரிதும் பாதிப்புக்கு ஆளாகினர். 


இதற்கிடையில், போலி E-பாஸ், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தல் போன்ற அத்துமீறல்களும் அதிகரித்தன. எனவே, E-பாஸ் நடைமுறையை கைவிட வேண்டும் என, பொது மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், E-பாஸ் நடைமுறையை ரத்து செய்யும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தன.


ALSO READ | அமலுக்கு வந்தது அனைவருக்கும் E-பாஸ் முறை; புதிய நடைமுறைகள் என்னென்ன?...


இதையடுத்து, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறையை முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்தார். இதன்படி 'ஆதார்' அல்லது ரேஷன் கார்டு விபரம் அளிக்கும் அனைவருக்கும் எந்த தாமதமும் இன்றி இ-பாஸ் வழங்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. 


இந்நிலையில், தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் E-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர். இதனால் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் பலரும் வருகை புரிந்துள்ளனர்.