தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு நேற்று தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது நாளை மறுநாள் முதல் தொழிற்சாலை வாகனங்களுக்கு இ-பதிவு (E-Registration) கட்டாயம் என தமிழக அரசு (Tamil Nadu Government) அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது.,


ALSO READ | திருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு முறை எவ்வாறு பதிவு செய்வது


கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்காக, 24-05-2021 முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது மிக இன்றியமையாத சில பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறைத் தொழிற்சாலைகள் ஆகியவை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்கு கிடங்குகள், தொலை தொடர்பு சேவைகள், அத்தியாவசிய தரவு மையங்கள் பராமரிப்பு பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.


இந்த தொழிற்சாலை பணியாளர்கள் பணிக்கு சென்றுவர ஏற்கெனவே E-Registration முறையில் https://eregister.tnega.org/ பதிவு செய்துள்ளார்கள். ஏற்கெனவே பதிவு செய்துள்ள வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி புதுப்பித்து அளிக்கப்படும். இரு சக்கர வாகனங்களில் பணியாளர்கள் பணிக்கு சென்றுவர 25 முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 


எனவே இந்த தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களை பணிக்கு அழைத்து வர நான்கு சக்கர வாகனங்களை ஏற்பாடு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  


இந்த நான்கு சக்கர வாகனங்களை இ பதிவு முறையில் https://eregister.tnega.org/ வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இ பதிவு செய்து அதனடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்களின் அடிப்படையில் காவல்துறையினர் இவ்வாகனங்களை அனுமதிப்பர்.இரு சக்கர வாகனங்களின் அனுமதிகளை தவிர மற்ற விலக்களிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான இ பதிவு தானாகவே புதுப்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR