தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் "அனைவருக்கும் இ-சேவை" என்ற திட்டத்தின் கீழ் 13,336 இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீடு வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது, நிகழ்வில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இ-சேவை பயனர் குறியீடு வழங்கினார், விழாவில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த் ஆகியோர் பங்கேற்றனர், விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் "கிராமப்புறங்களில் அதிக அளவில் இ-சேவை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கள்ளச்சாராய மரணம்: CBCID விசாரணை தொடங்கியது


தமிழகத்தில் 12,525 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன, ஏறத்தாழ 12,300 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இ-சேவைகள் அமைக்கப்பட்டு உள்ளது, தமிழகத்தில் சுமார் 200 கிராமங்களில் மட்டுமே இ-சேவை மையங்கள் அமைக்க வேண்டும், இ-சேவை மையங்களால் பொது மக்கள் அலைச்சல் மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது,
மாற்றுத்திறனாளி, திருநங்கை, கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டவர் என பல்வேறு தரப்பினருக்கு இ-சேவை மையம் அமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் வாயிலாக தமிழகத்தில் இணைய சேவை வசதி 89 சதவீதத்திலிருந்து 93 சதவீதமாக உயர்ந்துள்ளது, கிராமங்களில் 5 கிலோ மீட்டர் இடைவெளிக்கு ஒரு இ - சேவை மையமும், நகரில் 2 கிலோ மீட்டர் இடைவெளிக்கு ஒரு இ - சேவை மையம் என அமைக்கப்பட்டுள்ளது, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொள்கை மாறக் கூடாது, மக்கள் அரசை தேடி வரக்கூடாது என்பதே முதல்வரின் விருப்பம், மக்களை தேடி அரசு செல்ல வேண்டும் என பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்" என பேசினார்.


திமுக அமைச்சரவை மாற்றப்பட்ட போது பிடிஆர் நிதி அமைச்சரில் இருந்து தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.  இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சில் ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோவினால் அவரின் அமைச்சர் இலாகா மாற்றப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, பல்வேறு வகையான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்ப வைத்தார்கள். இந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் தொடர்ந்து சண்டை சச்சரவு ஆளுநரிடம் மோதல் என்று நீண்டு கொண்டே செல்கிறது. திமுக அமைச்சரவையில் உள்ள நிதி அமைச்சரே 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று ஆடியோ மூலம் குறிப்பிட்டுள்ளது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எப்படி பேபி சக்ரமில் மீனா அவர்களின் ஆடியோ இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ அது போன்று இவரின் ஆடியோவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இதை திசை திருப்பவே இலக்கா மாற்றம் அமைச்சர் மாற்றம் என்று செய்துள்ளனர் இது தமிழக மக்களிடையே எந்த ஒரு நற்பெயரையும் ஏற்படுத்தாது. மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசியதும் ஆனால் தற்போது ஆளுங்கட்சியான பிறகு செய்வதும் முன்னுக்கு முரணாக உள்ளது என்று கூறினார்.


மேலும் படிக்க | திராவிட நிலப்பரப்பில் அகற்றப்பட்ட பாஜக... ஸ்டாலினின் அடுத்த பிளான் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ