ஆவணப் பதிவின்போது வழங்கப்படும் இரசீதை திரும்ப வீடு செல்வதற்கான e-pass-ஆக பயன்படுத்தி கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., ஆவணப் பதிவிற்காக பதிவு பொது மக்கள் ஒரு மண்டலம் விட்டு வேறொரு மண்டலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் நிகழ்வில் எவ்வித இடர்பாடும் இன்றி பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக ஆவணப்பதிவுக்கு முன் பதிவு செய்யும்போது இணைய தளத்தில் தரவிறக்கம் செய்யும் முன்பதிவு டோக்கன் மற்றும் பதிவு செய்ய கொண்டு செல்லும் ஆவண நகலை e-pass-ஆக பயன்படுத்திக் கொண்டு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பயணம் மேற்கொள்ள 31.05.2020 முதல் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. 


விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க 10,000 FPO-களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!...


ஆவணப் பதிவின்போது வழங்கப்படும் இரசீதை திரும்ப வீடு செல்வதற்கான e-pass-ஆக பயன்படுத்தி கொள்ளலாம். இதனால் ஆவணப் பதிவிற்கு தங்குதடையின்றி சென்று வர வசதி செய்து தரப்பட்டுள்ளது. 


மேலும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு ஆவணம் பதிவு முடிந்து அதற்குரிய நபர்கள் வெளியே சென்ற பிறகு அடுத்த ஆவணத்திற்கான நபர்கள் உள்ளே அழைக்கப்படுகின்றனர். அவர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைரேகை பெறுவதற்கு முன்பு அவர்களின் கைகள் Sanitizer கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.


சார்பதிவாளர் அலுவலக பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறைந்த பட்சம் 6 அடி இடைவெளி இருக்கும் வண்ணம் மேசை மற்றும் கைரேகை பெறும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அலுவலகத்திற்கு வரும்போது கைகளை சுத்தப்படுத்த உரிய வசதியும் தனித்தனியாக இடைவெளி விட்டு உட்காரும் வண்ணம் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே சார்பதிவாளர் அலுவலகம் வருதால் பொதுமக்களுக்கு எந்தவித COVID-19 தொற்றுகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக பதிவு பணி மேற்கொள்ளப்படுகிறது.


வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது: tnGovt...


இதனால் ஆவணப் பதிவு படிப்படியாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 1000க்கு குறைவான ஆவணங்களே பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது நாளொன்றிற்கு சராசரியாக 10000 ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. உதாரணமாக 10.06.2020ல் 12883 ஆவணங்கள் மூலம் 50.07 கோடி ரூபாயும் 11.06.2020ல் 9674 ஆவணங்கள் மூலம் 36.67 கோடி ரூபாயும் 12.06.2020ல் 10814 ஆவணங்கள் மூலம் 38.75 கோடி ரூபாயும் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


சார்பதிவாளர் அலுவலகங்களில் தினந்தோறும் 1000க்கு குறைவான ஆவணங்கள் பதிவு ஆவதாகவும் 50 பணியாளர்களுக்கு மேல் கோவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், சார்பதிவாளர் அலுவலகங்கள்; COIVD-19 தொற்று ஏற்படாத வண்ணம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயங்கி வருகின்றன என பதிவுத்துறைதலைவர் ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.