Earthquake: வேலூர் அருகே மிதமான நிலநடுக்கம்
வேலூரில் அதிகாலை 4.17 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூரில் அதிகாலை 4.17 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரில் இருந்து மேற்கு தென்மேற்கு திசையில் ஐம்பத்தி ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இதுமையம் கொண்டிருந்தது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்புமில்லை என தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்துள்ளத்தோடு, நில நடுக்கத்தினால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
வேலூரில் அதிகாலை ஏற்பட்ட இந்த மிதமான நில நடுக்கம் காரணமாக மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதியின் கூடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதை உணர்ந்து பொதுமக்கள் அச்சம் அடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நவம்பர் 29ஆம் தேதி 4 மணி 17 நிமிடங்கள் 22 வினாடிகள் என்ற மணி நேரத்தில், 25 கிலோமீட்டர் ஆழத்திற்கு வேலூரில் இருந்து 59 கிலோமீட்டர் மேற்குப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ALSO READ | நாடாளுமன்றத்தில் திமுக எழுப்பவுள்ள 5 பிரச்சனைகள் - டி.ஆர்.பாலு தகவல்
இந்த நிலநடுக்கத்தால் குடியாத்தம் வட்டம் தட்டப்பாறை கிராம மதுரா மீனூர் கொல்லைமேடு பகுதியில்
உள்ள செல்வம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை எனவும் அரசின் சார்பாக கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் ஆற்றல் வெளியேற்றப்பட்டு, பூமியின் தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதே சமயத்தில், 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.
ALSO READ | திரைப்படத்துறை மீதான விமர்சனங்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்- அண்ணாமலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR